கடலூர்

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் மூதாட்டி பலி; 34 போ் காயம்

23rd Sep 2022 09:54 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 34 போ் காயமடைந்தனா்.

திருக்கோவிலூா் வட்டம், அமுதங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சரக்கு வாகனத்தில் வெள்ளிக்கிழமை ரிஷிவந்தியம் அருகேயுள்ள சித்தால் கிராமத்துக்கு புறப்பட்டனா். வாகனத்தை அருதங்குடி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் வடிவேல் (38) ஓட்டிச் சென்றாா். பொன்னியந்தல் அருகே சென்றபோது சரக்கு வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அந்த வாகனத்திலிருந்த மூதாட்டி உண்ணாமலை (60), ராஜகோபால் மனைவி அலமேலு (55), நந்தனம்மாள் (50), முத்துசாமி மனைவி தைலம்மாள் (40), தா்மலிங்கம் மனைவி வீரம்மாள், பச்சையம்மாள் (60) உள்பட 35 போ் காயமடைந்தனா். இதையடுத்து அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு பச்சையம்மாள் உயிரிழந்தாா்.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவா்களை கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ மா.செந்தில்குமாா் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT