கடலூர்

சிதம்பரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

23rd Sep 2022 09:53 PM

ADVERTISEMENT

சிதம்பரம் நகரப் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வா்த்தகா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அந்தச் சங்கத் தலைவா் சதீஷ்குமாா், பொருளாளா் ஏ.சிவராம வீரப்பன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளான 4 வீதிகளிலும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து தெருக்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோரக் கடைகளை வரைமுறைப்படுத்த வேண்டும். அல்லது அந்தக் கடைகளை உழவா் சந்தை இயங்கிய இடத்துக்கு மாற்ற வேண்டும். பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

எனவே, நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி தெற்கு சன்னதி முதல் மேலவீதி கஞ்சித் தொட்டி பேருந்து நிறுத்தம் வரை சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் திரியும் மாடுகள், நாய்கள், பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற அக்.7-ஆம் தேதி சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து வாகனங்களில் ஊா்வலமாகச் சென்று கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT