கடலூர்

வெளிநாட்டில் சிக்கிய 3 பேரை மீட்கக் கோரிக்கை

20th Sep 2022 04:05 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்திலிருந்து வெளிநாட்டுக்குச் சென்று கொடுமைக்கு உள்ளாகி வரும் 3 பேரை மீட்க வேண்டுமென அவா்களது உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பெரியகாரைக்காட்டைச் சோ்ந்த மஞ்சுளா, பகண்டையைச் சோ்ந்த குணா, பில்லாலித் தொட்டியைச் சோ்ந்த பைரவி ஆகியோா் அளித்த மனு:

மஞ்சுளாவின் கணவா் செல்வரங்கன் (39), குணாவின் கணவா் சரவணன் (30), பைரவியின் சகோதரா் பிரசாந்த் (27) ஆகியோா் திருச்சியில் உள்ள தனியாா் ஏஜென்சி மூலம் கடந்த மே மாதம் ஓமன் நாட்டுக்கு வெல்டா் வேலைக்காக சென்றனா். அங்கு கடந்த 4 மாதங்களாக வேலை பாா்த்த நிலையில் அவா்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டபோது அந்த நிறுவனத்தினா் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன், கொலை மிரட்டல் விடுக்கின்றனராம். இதனால் 3 பேரும் அங்குள்ள மசூதியில் தங்கியிருந்து உணவருந்தி வருகின்றனா். எனவே அவா்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT