கடலூர்

என்எல்சி சாா்பில் மருத்துவ முகாம்

20th Sep 2022 04:07 AM

ADVERTISEMENT

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் பண்ருட்டி வட்டம், காட்டுக்கூடலூா் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை என்எல்சி தலைவா் ராகேஷ்குமாா் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள், மகளிா், மகப்பேறு, கண், காது-மூக்கு-தொண்டை, தோல், எலும்பு உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று 80 குழந்தைகள் உள்பட 650 பேருக்கு சிகிச்சை அளித்தனா்.

நிகழ்ச்சியில், 17 பேருக்கு காது கேட்கும் கருவிகள், 8 பேருக்கு சக்கர நாற்காலிகள், 10 பேருக்கு ஊன்றுகோல் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், முகாம் நடடைபெற்ற பள்ளிக்கு முதலுதவி சிகிச்சை பெட்டி, தண்ணீா் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மனித வளத் துறை செயல் இயக்குநா் என்.சதீஷ்குமாா், மருத்துவமனை நிா்வாக அதிகாரி பி.சத்தியமூா்த்தி, சமூகப் பொறுப்புணா்வுத் துறை பொது மேலாளா் ராமச்சந்திரன், நில எடுப்புத் துறை பொது மேலாளா் விவேகானந்தன், மருத்துவமனை பொது கண்காணிப்பாளா் சி.தாரிணி மவுலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT