கடலூர்

ஊதியம் நிலுவை: சித்த மருத்துவா்கள் புகாா்

20th Sep 2022 04:05 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று காலத்தில் பணியாற்றியதற்கான ஊதியம் தங்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என சித்த மருத்துவா்கள் புகாா் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் சித்த மருத்துவா்கள் செ.சுவாதிஷ், செ.தென்றல்ராஜ், செ.தீபாஸ்ரீ ஆகியோா் அளித்த மனு:

கரோனா தொற்று பரவல் காலத்தில் கடலூா் தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கல்லூரி சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு அங்கு ஆயுஷ் மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமாா் ஆயிரம் போ் சிகிச்சை பெற்றனா். ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் முதல் அக்டோபா் மாதம் வரை, மாதம் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சோ்ந்தோம். மொத்தம் 5 மாதங்கள் பணியாற்றிய நிலையில் 2 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, துறை ரீதியாக பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கரோனா காலத்தில் பணியாற்றியதற்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT