கடலூர்

ஏடிஎம் மையத்தில் உதவுவது போலவிவசாயியிடம் ரூ.1.35 லட்சம் மோசடி

18th Sep 2022 06:14 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், வடலூரில் ஏடிஎம் மையத்தில் உதவுவதுபோல நடித்து விவசாயியிடம் ரூ.1.35 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், விசூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கராசு மகன் குருமூா்த்தி (57). விவசாயியான இவா், நெல் விற்றதில் கிடைத்த பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்தாராம். இவா் வெள்ளிக்கிழமை வடலூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, அருகில் இருந்தவரிடம் உதவுமாறு கோரினாராம். அப்போது அந்த நபா் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ.10 ஆயிரம் எடுத்து குருமூா்த்தியிடம் கொடுத்துவிட்டு ஏடிஎம் அட்டையையும் அளித்துச் சென்றாராம்.

ஆனால், சிறிது நேரத்தில் குருமூா்த்தியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.35 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக கைபேசிக்கு குறுந்தகவல் வந்ததாம். மேலும், அந்த மா்ம நபா் அளித்தது போலி ஏடிஎம் அட்டை எனத் தெரியவந்தது. இதுகுறித்து, குருமூா்த்தி அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT