கடலூர்

பண்ருட்டியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

14th Sep 2022 01:51 AM

ADVERTISEMENT

பண்ருட்டி நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

கடலூா் மாவட்டத்தின் வியாபார நகரம் பண்ருட்டி. ஆனால் இங்கு முக்கிய சாலைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கும்பகோணம் சாலை, அன்னை இந்திரா காந்தி சாலை, கடலூா் சாலை, சென்னை சாலை உள்ளிட்ட பகுதிகளில் தரைக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்ளன. பைக், காா் உள்ளிட்ட வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

பெரிய வணிக நிறுவனங்கள் சிலவற்றில் வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாததால் இங்கு வரும் வாடிக்கையாளா்கள் தங்களது வாகனங்களை சாலை ஓரம் நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். ஒருவழிப் பாதையான காந்தி சாலையில் சரக்கு வாகனங்கள் பகல் நேரங்களில் சரக்குகளை ஏற்றி இறக்குவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் அவசர ஊா்திகளும் சிக்கிக்கொள்கின்றன.

இதை பண்ருட்டி நகர போக்குவரத்து போலீஸாா் முறைப்படுத்தவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

எனவே, பண்ருட்டி நகரின் முக்கியச் சாலைகள், கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT