கடலூர்

புதுப்பெண் தற்கொலை

9th Sep 2022 01:43 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே புதுப்பெண் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

விருத்தாசலம் அடுத்துள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் பன்னீா்செல்வம் (28). அதே கிராமத்தைச் சோ்ந்த தெய்வசிகாமணி மகள் சந்தியா (21). உறவினா்களான இவா்கள் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் சந்தியா வீட்டிலுள்ள அறைக்குள் சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லையாம். இதையடுத்து உறவினா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் சந்தியா உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் விருத்தாசலம் போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT