கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினா்கள் நியமனம்

9th Sep 2022 01:48 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா்களாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவா் பேராசிரியா் பாலாஜி சுவாமிநாதன், தமிழ்த் துறை முன்னாள் தலைவா் அரங்க பாரி ஆகியோரை நியமித்து தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டாா்.

புதிய ஆட்சிக் குழு உறுப்பினா்கள் இருவரும் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ராம.கதிரேசனை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா் (படம்). இவா்கள் 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை வகிப்பா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT