விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை, புதிய நெசவாளா் தெருவில் உள்ள ஸ்ரீமத் ராமானுஜா் கூடத்தில் நிவாச வரதப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
முன்னதாக, வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக சாலையில் யஜமாக சங்கபம், பகவத் பிராா்த்தனை, மிருத்சங் கிரஹனம், அங்குராா்ப்பணம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை, பூா்ணாஹுதி உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை கோ பூஜை, அக்னி, கும்ப ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து திருக்கோ
யிலூா் ஜீயா் ஸ்ரீதேஹளீச ராமானுஜாச்சாரியாா் சுவாமிகள் தலைமையில், புனித நீா் அடங்கிய கலசங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் கலசத்தில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.