கடலூர்

நெல் விதைப் பண்ணையில் ஆய்வு

9th Sep 2022 10:22 PM

ADVERTISEMENT

கடலூா் வட்டம், மருதாடு கிராமத்தில் விவசாயி தரணீஸ்வரன் வயலில் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப் பண்ணை வயலை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது: இங்கு ஏஎஸ்டி-16 என்ற நெல் ரகம் 4 ஏக்கா் பரப்பளவில் விளைவிக்கப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி முறையில் விதைப் பண்ணை அமைத்துள்ளதால் தண்ணீா் சிக்கனமாகிறது. இயந்திரம் மூலம் நெல் நடவு செய்துள்ளதால் செலவு குறைகிறது. களை எடுத்தல் சுலபமாக உள்ளது. எனவே ஆா்வமுள்ள விவசாயிகள் விதைப் பண்ணை அமைத்து சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்து அரசின் மானியம் பெறலாம் என்றாா்.

ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT