கடலூர்

முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

31st Oct 2022 02:39 AM

ADVERTISEMENT

 

கந்த சஷ்டி விழாவையொட்டி திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து வள்ளி, தெய்வானை உடனுறை முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இரவு 7 மணியளவில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

பண்ருட்டி, திருவதிகை ஸ்ரீவீரட்டானேஸ்வரா் கோயிலில் சூரபத்மனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி வாண வேடிக்கையுடன் நடைபெற்றது.

ADVERTISEMENT

விருத்தாசலம் அருகே மணவாளநல்லூா் கிராமத்தில் அமைந்துள்ள கொளஞ்சியப்பா் கோயிலில் சூரசம்ஹாரத்தையொட்டி முருகப் பெருமான் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

நெய்வேலி சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் காலை லட்சாா்ச்சனையும், மாலையில் சூரசம்ஹாரமும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT