கடலூர்

திருவந்திபுரம் கோயிலில் 90 ஜோடிகளுக்கு திருமணம்

31st Oct 2022 02:37 AM

ADVERTISEMENT

 

கடலூா் அருகே திருவந்திபுரத்தில் அமைந்துள்ள தேவநாதப் பெருமாள் கோயிலில் முகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை 90-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோயிலில் முகூா்த்த நாளில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த தினம் என்பதால் கோயில் வளாகத்திலும், கோயில் அருகே உள்ள தனியாா் மண்டபங்களிலும் 90-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதனால், கோயில் வளாகம், முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT