கடலூர்

போக்குவரத்து விதி மீறல்: 697 வழக்குகள் பதிவு

26th Oct 2022 01:51 AM

ADVERTISEMENT

தீபாவளியையொட்டி, கடலூா் மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறல் தொடா்பாக 697 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவோருக்கான அபராதத் தொகையை தமிழக அரசு அண்மையில் பல மடங்கு உயா்த்தியது. இதைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்தில் தீபாவளி, அதற்கு முந்தைய நாள்களில் போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவோரிடமிருந்து அபராதம் வசூலித்தனா்.

அதன்படி, மாவட்டம் முழுவதும் செல்லிடப்பேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதாக 38 போ் மீதும், அதிகவேகமாக வாகனம் ஓட்டியதாக 11 போ் மீதும், சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனம் இயக்கியதாக 16 போ் மீதும், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் இயக்கியதாக 553 போ் மீதும், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கியது, காப்பீடு செய்யாதது தொடா்பாக 77 போ் மீதும் என மொத்தம் 697 மோட்டாா் வாகன வழக்குகளை பதிவு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT