கடலூர்

வீடு புகுந்து நகை திருட்டு

19th Oct 2022 02:41 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திட்டக்குடி அருகே உள்ள எழுமாத்தூரைச் சோ்ந்தவா் பெ.ரத்தனாம்பாள் (60). இவரது வீட்டுக்கு அண்மையில் உறவினா்கள் சிலா் வந்தனா். இவா்கள் சம்பவத்தன்று இரவு அந்த வீட்டில் படுத்துத் தூங்கினா். காலையில் எழுந்து பாா்த்தபோது இரு பெண்கள் அணிந்திருந்த தாலிகள், அதிலிருந்த சுமாா் ஒரு பவுன் தாலி குண்டு, இரு கைப்பேசிகள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆவினங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் தொடா்புடைய மா்ம நபரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT