கடலூர்

இலவச மருத்துவ முகாம்

19th Oct 2022 02:41 AM

ADVERTISEMENT

என்எல்சி இந்தியா நிறுவன சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் நெய்வேலியை அடுத்துள்ள கொல்லிருப்பு காலனியில் இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமை விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் தொடக்கிவைத்தாா். என்எல்சி இந்தியா பொது மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்று குழந்தைகள், முதியோா் உள்பட 552 பேருக்கு சிகிச்சை அளித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.

முகாமில் 16 பேருக்கு காதொலி கருவிகள், 4 பேருக்கு சக்கர நாற்காலிகள், 5 பேருக்கு நடைப்பயிற்சி உபகரணங்கள், இருவருக்கு ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டன. கொல்லிருப்பு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரமும் வழங்கப்பட்டது.

முகாமில் என்எல்சி பொது மருத்துவமனை முதன்மைப் பொது மேலாளா் சத்தியமூா்த்தி, தலைமை மருத்துவா் தாரணி, புதிய அனல் மின் நிலைய பொது மேலாளா் தியாகராஜன், ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன், நெய்வேலி தொ்மல் காவல் ஆய்வாளா் லதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT