கடலூர்

உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கடலூரில் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கடலூா் மாநகராட்சி பகுதிகளான எஸ்.என்.சாவடி, செம்மண்டலம், மஞ்சக்குப்பம் ஆகிய பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பி.கே.கைலாஷ் குமாா் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சந்திரசேகரன், பெ.நல்லதம்பி, சுப்பிரமணியன், சுந்தரமூா்த்தி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பவா்கள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT