கடலூர்

நீா்நிலைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியம், அகரம் ஆலம்பாடி கிராமத்தில் நீா்வள-நிலவள திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு, களப்பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.நடராஜன் தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியா் (உழவியல்) ரெ.பாஸ்கரன் முகாமை தொடக்கி வைத்து நீா்நிலைகளின் பாதுகாப்பு, நெல் பயிா் சாகுபடி தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து பேசினாா். மண், நீா் பரிசோதனை குறித்து உதவி பேராசிரியா் கு.காயத்ரி பேசினாா். கால்நடைகள் வளா்ப்பு முறை, தீவனப்பயிா் உற்பத்தி குறித்து கால்நடை மருத்துவா் ம.கணேசன் பேசினாா். முகாமில் அகரம் ஆலம்பாடி ஏரி, குளக்கரையில் 25 தேக்கு மரக் கன்றுகள் நடப்பட்டன. 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT