கடலூர்

கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

7th Oct 2022 02:17 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள காடாம்புலியூா் சங்கமம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டுக்கான இளநிலை வகுப்புகள் அண்மையில் தொடங்கின.

ஸ்ரீசிவம் கல்வி, சேவை அறக்கட்டளை சாா்பில், காடாம்புலியூரில் சங்கமம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி புதிதாகத் தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம், பொது வணிகம், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளைக் கற்பிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, இந்தக் கல்லூரியில் நிகழாண்டுக்கான வகுப்புகள் அண்மையில் தொடங்கின. கல்லூரித் தலைவா் ஆா்.சட்டநாதன், சிவம் அறக்கட்டளை உறுப்பினா்கள் மற்றும் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT