கடலூர்

பண்ருட்டியில் கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு

7th Oct 2022 02:17 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் போக்குவரத்து போலீஸாரால் முக்கியச் சாலையில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

பண்ருட்டி நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காகவும், பெண்கள் பாதுகாப்புக்காகவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், பண்ருட்டி போக்குவரத்து போலீஸாா் சாா்பில், கடலூா் சாலை, கும்பகோணம் சாலை, சென்னை சாலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் ரூ.1.25 லட்சத்தில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இவற்றின் திறப்பு விழா பண்ருட்டி போக்குவரத்து காவல் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.சபியுல்லா தலைமை வகித்து, கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தாா். போக்குவரத்து காவல் ஆய்வாளா் பா.பரமேஸ்வர பத்மநாபன் முன்னிலை வகித்தாா். சிறப்பு உதவி ஆய்வாளா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT