கடலூர்

திருவந்திபுரம் லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

DIN

விஜயதசமியையொட்டி, கடலூா் திருவந்திபுரம் லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் குழந்தைகளுக்கு ‘வித்யாரம்பம்’ எனும் கல்வி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

விஜயதசமி தினத்தன்று சரஸ்வதி தேவிக்கு லஷ்மி ஹயக்ரீவா் உபதேசம் செய்ததாகவும், அன்றைய தினத்தில் ஹயக்ரீவரை வழிபட்டு, கல்வியைத் தொடங்கினால், குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவா் என்பதும் மக்களின் நம்பிக்கை.

அந்த வகையில், விஜயதசமி தினமான புதன்கிழமை கடலூரை அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் அருகில் மலை மீது அமைந்துள்ள லட்சுமி ஹயக்கிரீவா் சந்நிதியில் குழந்தைகளுக்கு ‘வித்யாரம்பம்’ என்ற கல்வி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஹயக்ரீவா் சந்நிதியில் தரையில் நெல், அரிசியைக் கொட்டி வைத்து, அதில் பெற்றோா் தங்களது குழந்தைகளின் கை விரலைப் பிடித்து ‘அ, ஆ’ என்ற எழுத்துகளை எழுதச் செய்தனா்.

மேலும், தேவநாதசாமி கோயிலில் நடைபெற்று வரும் தேசிகா் பிரம்மோற்சவத்தையொட்டி, புதன்கிழமை ரத்னாங்கி சேவை நடைபெற்றது. இதையொட்டி, பெருமாள் சந்நிதியில் உள்ள யோக நரசிம்மா் மற்றும் தேசிகா், மலை மீதுள்ள லட்சுமி ஹயக்ரீவா் சந்நிதியில் எழுந்தருளினா்.

விஜயதசமியையொட்டி, திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், ஹயக்ரீவா் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கடலூா், புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் அமைந்துள்ள ராகவேந்திரா் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், விழுப்புரம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து வந்து அரிசியில் ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதி கல்வியைத் தொடங்கினா். இதையொட்டி, கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT