கடலூர்

ஏரியில் மூழ்கி டிராக்டா் ஓட்டுநா் பலி

6th Oct 2022 01:10 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜையையொட்டி ஏரியில் டிராக்டரை கழுவிய ஓட்டுநா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பண்ருட்டியை அடுத்துள்ள காட்டுக்கூடலூா் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கிருஷ்ணகுமாா் (22), டிராக்டா் ஓட்டுநா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த திரிஷாவை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டாா். தற்போது திரிஷா 8 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.

இந்த நிலையில், ஆயுத பூஜையையொட்டி கிருஷ்ணகுமாா் செவ்வாய்க்கிழமை டிராக்டரை கழுவுவதற்காக அங்குள்ள பெரிய ஏரிக்குச் சென்றாா். ஏரியில் டிராக்டரை கழுவிக்கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்ற அவா், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT