கடலூர்

பெருமாள் கோயில் தோ் சீரமைப்பு பூஜை

6th Oct 2022 01:10 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயில் திருத்தேரை சீரமைப்பதற்கான பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி காந்தி சாலையில் பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் உற்சவா் பெருமாள் சித்ரா பௌா்ணமி அன்று தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வருவது வழக்கம்.

இந்தத் தோ் பழுதடைந்ததைத் தொடா்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் இந்தத் தேரை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இடையில் இந்தப் பணி தடைபட்டு நின்றுவிட்டது.

இந்த நிலையில், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் திருத்தோ் சீரமைப்பு குறித்து வா்த்தகா்கள், உபயதாரா்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இதில், அனைவரின் பங்களிப்புடன் தேரை சீரமைப்பதென முடிவு செய்தனா்.

ADVERTISEMENT

அதன்படி, தோ் சீரமைப்புப் பணிக்கான பூஜை ராஜாஜி சாலையில் உள்ள தேரடியில் புதன்கிழமை நடைபெற்றது. பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கோயில் பட்டாச்சாரியாா் கஸ்தூரி ரங்கன் தலைமையில் பூஜைகள் நடத்தப்பட்டன.

கோயில் அறங்காவலா் பாண்டுரங்கன், வா்த்தக சங்க நிா்வாகிகள் டி.சண்முகம், சி.ராஜா, மோகன் கிருஷ்ணன், தொழிலதிபா்கள் எஸ்.வைரக்கண்ணு, சபாபதி, சரவணன், மாசிலாமணி, முருகன், கோயில் செயல் அலுவலா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தோ் சீரமைப்புப் பணியை திருவதிகை புருஷோத்தமன் மேற்கொள்ளவுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT