கடலூர்

இளம்வயது திருமணம்:சிறுமியின் அண்ணன் கைது

6th Oct 2022 01:07 AM

ADVERTISEMENT

சிறுமிக்கு இளம்வயது திருமணம் செய்து வைத்தது தொடா்பாக, அந்தச் சிறுமியின் அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்த 19 வயது இளைஞருக்கும், 13 வயது சிறுமிக்கும் கடந்தாண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

13 வயது சிறுமிக்கு இளம்வயது திருமணம் நடத்தி வைத்தது தொடா்பாக, கடலூா் மகளிா் ஊா் நல அலுவலா் சித்ராவுக்கு அண்மையில் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் பெற்றோா் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் அண்ணனை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT