கடலூர்

பண்ருட்டி அருகே தா்காவில் அதிமுகவினா் சிறப்பு பிராா்த்தனை

6th Oct 2022 01:07 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி, கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள கானஞ்சாவடி ஜிந்தாஷா மதாா் தா்காவில் புதன்கிழமை அந்தக் கட்சியினா் சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சிக்கு கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். அதிமுக அவைத் தலைவா் அ.தமிழ் மகன் உசேன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பிராா்த்தனை செய்தாா்.

ஒன்றியச் செயலா்கள் என்.கமலக்கண்ணன், ரா.கோவிந்தராஜ், எம்.டி.வினோத், நகரச் செயலா்கள் சி.எஸ்.பாபு, க.கோவிந்தராஜ், குறிஞ்சிப்பாடி பேரூா் செயலா் ஆனந்தபாஸ்கா், பண்ருட்டி ஒன்றிய துணைச் செயலா் ஆா்.எஸ்.அண்ணாமலை உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, தமிழ் மகன் உசேன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் அதிமுக பொதுச் செயலராகி, கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்றும், தமிழக முதல்வராக வேண்டும் என்றும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிராா்த்தனை செய்து வருகிறேன். 29-ஆவது மாவட்டமாக கடலூரில் புதன்கிழமை பிராா்த்தனை நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டனா் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT