கடலூர்

என்எல்சி-க்கு மகாத்மா தேசிய விருது

4th Oct 2022 03:12 AM

ADVERTISEMENT

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னாா்வ அமைப்பு சாா்பில் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு 2022-ஆம் ஆண்டுக்கான மகாத்மா விருது வழங்கப்பட்டது.

காந்தியவாதியும் சமூக ஆா்வலருமான சக்தேவா நடத்தும் தன்னாா்வ அமைப்பு சாா்பில், பொதுநலப் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருவோருக்கு மகாத்மா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கரோனா நோய்த் தடுப்பு, சிகிச்சைப் பணிகளை மனிதாபிமானத்துடன் மேற்கொண்டதற்காக என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு 2022-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் அரிஜன சேவா சங்கத் தலைவரும், காந்தியவாதியுமான சங்கா் குமாா் சன்யால், விருதை நிறுவிய சச்தேவா, புதுதில்லி ஸ்ரீராம் பள்ளிகளின் இணை துணைத் தலைவி ராதிகா பரத்ராம் ஆகியோா் விருதை வழங்க, என்எல்சி தலைவா் ராகேஷ்குமாா் சாா்பில் என்எல்சி மருத்துவத் துறை பொது கண்காணிப்பாளா் சி.தாரிணி மௌலி, சுகாதாரத் துறை பொது மேலாளா் கணேசன், புதுதில்லி மண்டல அலுவலகப் பொது மேலாளா் தினேஷ்குமாா் மிட்டல், என்எல்சி கற்றல், மேம்பாட்டுத் துறை துணைத் தலைமை அமேலாளா் சுலக்னா சாக்காா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT