கடலூர்

விவசாயப் பணிகளுக்கு என்எல்சி சுரங்க நீா் கோரி ஆா்ப்பாட்டம்

4th Oct 2022 03:10 AM

ADVERTISEMENT

என்எல்சி இந்தியா நிறுவன சுரங்க நீரை விவசாயப் பணிக்கு திறக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியப் பகுதியில் மேலகொளக்குடி, கருங்குழி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. ஆனால், போதிய தண்ணீா் கிடைக்காததால் சுமாா் 450 ஹெக்டோ் பரப்பில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, என்எல்சி இந்தியா நிறுவன சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை விவசாயப் பணிகளுக்கு வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் எம்.பி.தண்டபாணி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் என்எல்சி சுரங்கம்-2 நுழைவு வாயில் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சே.சுரேஷ்குமாா் தலைமையில் என்எல்சி அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் என்எல்சி பொது மேலாளா் விஜயகுமாா், துணைப் பொது மேலாளா் குமாா், உதவிப் பொது மேலாளா் கனகராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.தண்டபாணி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.சிற்றரசு, சி.ராமன், கொளக்குடி ஊராட்சி மன்றத் தலைவா் த.சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது, அடுத்த ஒரு வாரத்துக்குள் விவசாய பணிக்கு சுரங்க நீரை திறந்து விடுவதாகவும், மேலகொளக்குடி ஏரியைத் தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் என்எல்சி அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT