கடலூர்

ஆட்சியா் முன்னிலையில் பெண் தற்கொலை முயற்சி

4th Oct 2022 03:11 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் பெண் ஒருவா் திங்கள்கிழமை விஷம் குடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவா்களில் பெண் ஒருவா் ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றபோது, தான் மறைத்து வைத்திருந்த விஷ புட்டியை திடீரென எடுத்து விஷம் குடிக்க முயன்றாா். அப்போது அங்கிருந்த போலீஸாா் அவரை தடுத்து விஷ புட்டியை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா் பண்ருட்டியை அடுத்துள்ள பொன்னங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மனைவி கஜலெட்சுமி (47) என்பதும், அந்தக் கிராம பொது வழியை தனி நபா்கள் சிலா் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்துள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியா் முன்னிலையில் விஷம் குடிக்க முயன்ாகவும் தெரிவித்தாா். இதுகுறித்து ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

இதுபோல தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என அவரை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT