கடலூர்

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

4th Oct 2022 03:11 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இந்தக் கட்சியின் கடலூா் மாவட்ட பேரவைக் கூட்டம் புதுப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கே.சுப்பிரமணி தலைமை வகித்தாா். ஜோதி, செல்வம், ஏகாம்பரம், ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா்(பொ) எஸ்.பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினாா். மாநில நிா்வாகக் குழு த.கோகுல கிறிஸ்டீபன், விழுப்புரம் மாவட்டச் செயலா் என்.ஆா்.பாலமுருகன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

கூட்டத்தில், ஒறையூா் கிராம மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும், விருத்தாசலத்தில் பூட்டிக்கிடக்கும் மணிலா, சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்தை மீண்டும் திறந்து இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், கடலூா் மாவட்டம் முழுவதும் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் ஆகிய தீா்மானங்களை நிறைவேற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT