கடலூர்

மாடுகளைத் தாக்கும் தோல் கழலை நோய்

DIN

தோல் கழலை நோயிலிருந்து மாடுகளை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அம்மை இனத்தைச் சாா்ந்த நச்சுயிரியால் ஏற்படும் ஒருவகையான நோய்தான் தோல் கழலை. இந்த நோயானது வட மாநிலங்களில் மாடுகளுக்கு அதிவேகமாக பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடலூா் மாவட்டத்தில் தற்போது இந்த நோய் பாதிப்பு இல்லை. இருப்பினும் இந்த நோயானது மழை, குளிா் காலங்களில் மாடுகளுக்கு பரவ வாய்ப்புள்ளதால் கடலூா் மாவட்ட விவசாயிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

இந்த நோயானது கொசுக்கள், கடிக்கும் ஈக்கள், உண்ணிகள் மூலம் பரவும். இந்த நோய் பாதித்த மாடுகளுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு, மூச்சு விடுதலில் சிரமம், தீவனம் உண்ணாமை, பால் உற்பத்தி குைல், தோல்களில் வட்ட வடிவில் தடித்த முடிச்சுகள் காணப்படுதல், தாடைகள், கழுத்து, முன்கால்களுக்கு இடையே வீக்கம், நிணநீா் சுரப்பிகளில் வீக்கம், மாடுகள் நடக்க இயலாதிருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். சினைப்பிடித்த மாடுகளுக்கு கருச் சிதைவு ஏற்படும்.

இந்த நோயானது நச்சுயிரியால் ஏற்படுவதாலும், இதற்கென தனித்த சிறப்பு சிகிச்சை ஏதும் இல்லாததாலும் விவசாயிகள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாலை, இரவு நேரங்களில் மாட்டுக் கொட்டகையில் புகை மூட்டம் ஏற்படுத்துதல், உண்ணிகளை மாடுகளிலிருந்து அப்புறப்படுத்துதல், கொட்டகை மற்றும் மாடுகளைச் சுத்தமாக பராமரித்தல், நோய் பாதித்த கால்நடைகளை தனிமைப்படுத்துதல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். நோயின் தீவிரத்தை குறைக்கும் பொருட்டு மாடு ஒன்றுக்கு 10 கிராம் கருப்பு மிளகு, 50 கிராம் வெல்லம், 10 கிராம் உப்பு ஆகியவற்றை தூளாக்கி 10 வெற்றிலைகளில் வைத்து நாள் ஒன்றுக்கு 3 முறை வீதம் 5 நாள்களுக்கு அளிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ் மொழிக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கு.மு. அண்ணல் தங்கோ: பழ.நெடுமாறன் புகழாரம்

மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு எங்கே அனுமதி பெறலாம்? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

கேரளத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

SCROLL FOR NEXT