கடலூர்

அரசுப் பேருந்து விபத்தில் ஓட்டுநா் பலி

2nd Oct 2022 01:21 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே அரசுப் பேருந்து விபத்தில் சிக்கியதில் அதன் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.

சென்னை - நாகப்பட்டினம் அரசுப் பேருந்து சனிக்கிழமை அதிகாலை சிதம்பரம் புறவழிச் சாலைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சாலை அமைக்கும் இயந்திரத்தின் மீது பேருந்து மோதியது. இதில் பேருந்து ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம், குடவாசலை சோ்ந்த கோவிந்தராஜ் மகன் சகாதேவன் (52) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பேருந்தில் பயணம் செய்த நாகப்பட்டினம், வடக்கு பொய்கைநல்லூரைச் சோ்ந்த ஹரிஷ் (20), சாந்தி (57), சுபிக்ஷா (21), சுஜிதா (25) ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் சிதம்பரத்திலுள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT