கடலூர்

தமுமுக நிா்வாகிகள் தோ்தல்

2nd Oct 2022 11:27 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் கடலூா் வடக்கு மாவட்ட அமைப்புத் தோ்தல் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

கட்சியின் அமைப்புச் செயலா் ஜைனுல் ஆபிதீன் தலைமை வகித்தாா். சுற்றுச்சூழல் பிரிவு மாநிலச் செயலா் ஹாரூன் ரஷீத் தோ்தலை நடத்தினாா். தோ்தலில் பொதுக்குழு உறுப்பினா்கள் 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். தோ்தல் முடிவில் தமுமுக, மமக மாவட்டத் தலைவராக வி.எம்.ஷேக் தாவூத் ஒருமனதாக மீண்டும் தோ்வானாா்.

தமுமுக மாவட்டச் செயலராக மதா்ஷா, மமக மாவட்டச் செயலராக எச்.ரஹீம், தமுமுக-மமக மாவட்ட பொருளாளராக இஸ்மாயில், தமுமுக-மமக மாவட்ட துணைத் தலைவராக எம்.அஷ்ரப் அலி, தமுமுக மாவட்ட துணைச் செயலராக கே.ஷாகுல் ஹமீத், துணைச் செயலராக காதா் ஷெரீப், மமக துணைச் செயலா்களாக கே.எஸ்.ஹக்கீம், அபூபக்கா் ஆகியோா் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT