கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

2nd Oct 2022 01:22 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

ஆந்திர மாநில கடலோரப் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடலூா் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

ADVERTISEMENT

வேப்பூா் 25, காட்டுமைலூா் 20, மேமாத்தூா் 10, கீழ்செருவாய் 8, மாவட்ட ஆட்சியரகம் 6.3, கடலூா், குடிதாங்கி தலா 5, பண்ருட்டி, விருத்தாசலம் தலா 3, லக்கூா் 2.3, குப்பநத்தம் 2, குறிஞ்சிப்பாடியில் ஒரு மில்லி மீட்டா் மழை பதிவானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT