கடலூர்

ஆலையில் திருட முயன்ற 11 போ் கைது

2nd Oct 2022 01:21 AM

ADVERTISEMENT

 

சிதம்பரம் அருகே தனியாா் ஆலையில் இரும்பு தளவாடங்களை திருட முயன்ாக 11 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் அருகே பெரியகும்பத்தில் தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இங்கிருந்து சுமாா் ரூ.13 ஆயிரம் மதிப்பிலான 650 கிலோ இரும்பு தளவாடப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் செல்ல முயல்வதாக ஆலையின் பாதுகாப்பு அலுவலா் மனோகரன் புதுச்சத்திரம் போலீஸாருக்கு சனிக்கிழமை அதிகாலையில் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து ஆலைக்கு வந்த போலீஸாா், இரும்பு தளவாட பொருள்களை திருட முயன்ற 11 பேரை பிடித்து கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 5 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT