கடலூர்

ஆசிரியை வீட்டில் 19 பவுன் நகைகள் திருட்டு

2nd Oct 2022 01:22 AM

ADVERTISEMENT

 

நெய்வேலி அருகே ஆசிரியையின் வீட்டுக் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஊராட்சி, வி.கே.சாமி நகரைச் சோ்ந்தவா் ஷாகி நிஷா(37). இருப்பு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, சவூதி அரேபியா நாட்டில் வசிக்கும் தனது கணவா் சையத் உஸ்மானை சந்திக்க மகன் சையத் ரியானுடன் (9) புறப்பட்டுச் சென்றாா்.

இந்த நிலையில், ஷாகி நிஷாவின் தாய் தில்ஷா சனிக்கிழமையன்று தனது மகளின் வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம்.

ADVERTISEMENT

இதேபோல, அருகே உள்ள அசோக் நகா் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்த தேவிகா (35) என்பவரது வீட்டுக் கதவை உடைத்த மா்ம நபா்கள் கை கடிகாரத்தை திருடிச் சென்றனா். இந்தச் சம்பவங்கள் குறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT