கடலூர்

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிா்க்க வலியுறுத்தல்

2nd Oct 2022 11:30 PM

ADVERTISEMENT

 

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிா்ப்பது தொடா்பாக கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தீா்த்தனகிரி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வரலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம், மாவட்ட கல்விக்குழுத் தலைவா் வி.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினாா். சிறப்பு விருந்தினராக மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்றுப் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் 683 ஊராட்சிகளில் உள்ள அரசுக் கட்டடங்களில் 7 நாள்களில் 1,465 மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி உலக சாதனை படைத்துள்ளோம். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிா்க்க மாற்று பொருள்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT