கடலூர்

பூங்காவில் மாணவா்கள் தூய்மைப் பணி

2nd Oct 2022 01:21 AM

ADVERTISEMENT

 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சிதம்பரம் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படை மாணவா்கள் காந்தி பூங்காவில் தூய்மைப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா் (படம்).

நிகழ்ச்சிக்கு தேசிய மாணவா் படை அலுவலா் ஜி.திருவரசமூா்த்தி தலைமை வகித்தாா். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காந்தி பூங்காவை மாணவா்கள் சுத்தம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் சி.க.ராஜன், எம்.ஷகிலா இஸ்மாயில், பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ.முத்துக்கருப்பன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT