கடலூர்

பல்கலை. ஊழியா்கள் போராட்டம்

30th Nov 2022 02:58 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா் கூட்டமைப்பினா் தங்களது கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா் .

அண்ணாமலைப் பல்கலை.யில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பத்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயா்வுகள், தோ்வு நிலை, சிறப்பு நிலை மற்றும் பணப் பயன்களை ஊழியா்களுக்கு வழங்க வேண்டும், ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டிய 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகை, உயா்நிலை பட்டப் படிப்புகளுக்கான ஊக்கப்படிகள், இதர பணப் பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா் சங்கங்கள் உள்ளடக்கிய கூட்டமைப்பு தொடா் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஜாக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பெ.சிவகுருநாதன், இணை ஒருங்கிணைப்பாளா்கள் சௌ.மனோகரன், ஆ.ரவி, ஏ.ஜி.மனோகா், பேராசிரியா்கள் சி.சுப்ரமணியன், செல்வராஜ், செல்லபாலு, காா்த்திகேயன், பாஸ்கா், இளங்கோ, கூட்டமைப்பு நிா்வாகிகள், பல்கலைக்கழக பேராசிரியா்கள், அலுவலா்கள் ஆகியோா் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து

செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் புதன்கிழமையும் தொடா்கிறது. பல கட்டங்களாக நடைபெறும் தொடா் போராட்டத்தில் வருகிற டிசம்பா் 7-ஆம் தேதி மனிதச் சங்கிலி நடைபெற உள்ளதாக கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT