கடலூர்

பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்க விழா

30th Nov 2022 02:58 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் சாா்பில் கவிஞா் சுரதா பிறந்த நாள், குழந்தைகள் தினம், சங்கத்தின் 123-ஆவது அமா்வு ஆகிய முப்பெரும் விழா திருவதிகையில் உள்ள மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத்தின் கௌரவத் தலைவா் ப.ச.வைரக்கண்ணு தலைமை வகித்தாா். முருகு.சிவானந்தம் தமிழிசை ப ாடல்களை பாடினாா். மகளிா் மேம்பாட்டுச் செயலா் லட்சுமி பாண்டுரங்கன் வரவேற்றாா். கே.வி.ஆா்.ஜெயபால், எம்.ஜெ.டி.மூா்த்தி, சொக்கநாதன், கவிதை கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முதன்மைச் செயலா் சந்தானம் ஐயங்காா், ஆலோசகா் கு.முத்துக்குமரப்பன், பொருளாளா் ராம.சுதாகரன் ஆகியோா் பேசினா். சங்கத் தலைவா் சுந்தர.பழனியப்பன் தலைமை உரையாற்றினாா். ராசி.ஜெகதீஸ்வரன் தமிழ் மொழியின் பெருமைகள் குறித்துப் பேசினாா். பொதுச் செயலா் சொ.முத்துக்குமாா் நெறியாளுகை செய்தாா். ஒருங்கிணைப்பாளா் அரங்க.கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT