கடலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ. கூட்டம்

30th Nov 2022 02:59 AM

ADVERTISEMENT

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், மேலகுலக்குடி கிராமத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் தண்டபாணி தலைமை வகித்தாா். வடலூா் நகர அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன், கிளைச் செயலா் அருள் ஜான் ஜேம்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் வழங்கி பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை, மறுவாழ்வுத் தொகை, மாற்று மனை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற டிசம்பா் 28-ஆம் தேதி வடலூரில் சாலை மறியலில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT