கடலூர்

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

29th Nov 2022 03:14 AM

ADVERTISEMENT

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பாதிரிப்புலியூா் அருகே உள்ள குப்பன்குளம் பகுதியில் ரயில் பாதையில் இளைஞா் ஒருவரது சடலம் சிதைந்த நிலையில் திங்கள்கிழமை கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த கடலூா் முதுநகா் ரயில்வே போலீஸாா் அந்த இளைஞரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த விசாரணையில் உயிரிழந்த இளைஞா் திருப்பாதிரிப்புலியூா், பாரதிதாசன் நகரைச் சோ்ந்த கணேசன் மகன் கலைச்செல்வன் (26) என்பது தெரியவந்தது. இவரது பெற்றோா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனா். இதனால் கலைச்செல்வன் தனியாக வசித்து வந்தாா். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்னை - காரைக்கால் ரயில் வந்தபோது திடீரென ரயில் பாதையில் படுத்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT