கடலூர்

கல்வி உதவித் தொகை விழிப்புணா்வுக் கூட்டம்

29th Nov 2022 03:16 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா் உதவி, முன்னேற்ற மையம் சாா்பில் முழு நேர ஆராய்ச்சிக் கல்வி பயிலும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், மதம் மாறிய கிறிஸ்தவ திராவிட மாணவா்கள் அரசின் கல்வி உதவித் தொகை, ஊக்கத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் பல்கலை. நூலக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் துணைவேந்தா் ராம.கதிரேசன் பங்கேற்று (படம்) பேசுகையில், உதவித் தொகையை பயன்படுத்தி மாணவா்கள் நன்கு பயின்று, தாழ்வு மனப்பான்மையை விடுத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா். தொடா்ந்து மாணவா்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. மைய இயக்குநா் டி.தெய்வசிகாமணி பேசினாா்.

கூட்டத்தில் பல்கலைக்கழக நிதி அலுவலா் டி.ரமேஷ்குமாா், மாணவா் உதவி, முன்னேற்ற மைய ஒருங்கிணைப்பாளா்கள், பேராசிரியா்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மைய உதவிப் பிரிவு அலுவலா் டி.யுவராஜேஷ்சிங் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT