கடலூர்

கடலூா் ஆட்சியரகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

29th Nov 2022 03:16 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதியவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சிகாமணி (59). இவா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த நிலையில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கிருந்த போலீஸாா் அவரை தடுத்து அவசர ஊா்தி மூலம் சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சிகாமணி கூறியதாவது: பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் எனக்கு வீடு ஒதுக்கித் தருவதாக ஊராட்சி மன்றத் தலைவா் கூறினாா். அதை நம்பி எனது வீட்டை இடித்துவிட்டேன். ஆனால், தற்போது ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டு வீடு ஒதுக்க மறுத்து வருவதாகவும், இதனால் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ாகவும் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT