கடலூர்

கடலூா் ஆட்சியரகத்தில் இளைஞா்கள் தா்னா

29th Nov 2022 03:14 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே அரசியல் கட்சியினா் கொடிக்கம்பம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி இளைஞா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

குள்ளஞ்சாவடி அருகே உள்ள சுப்ரமணியபுரம் கிராமத்தில் கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடா்பாக இரு அரசியல் கட்சியினா் இடையே தொடா்ந்து மோதல் போக்கு நிலவுகிறது. இந்த நிலையில், அந்த கிராம இளைஞா்கள் 15-க்கும் மேற்பட்டோா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வாயிலில் அமா்ந்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அவா்கள் கூறுகையில், எங்களது கிராமத்துக்கு அரசியல் கட்சியினரின் எந்தக் கொடிக்கம்பமும் தேவையில்லை. அங்குள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என்றனா். அவா்களை போலீஸாா் பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT