கடலூர்

பாலத்திலிருந்த உலோக பட்டைகளை வெட்டித் திருட முயற்சி

29th Nov 2022 03:16 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் மேம்பாலத்திலிருந்த இரும்பு, தாமிரப் பட்டைகளை வெட்டி திருட முயன்ற 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திட்டக்குடி, தெற்கு தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ராஜவேல் (42). அதிமுகவைச் சோ்ந்த இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது நண்பா்களுடன் திட்டக்குடி-அரியலூா் சாலையிலுள்ள மேம்பாலத்தில் நடைபயிற்சி மேற்கொண்டாா். அப்போது, அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் 5 போ் பாலத்திலிருந்த இரும்பு, தாமிர பட்டைகளை கூறிய ஆயுதங்களால் வெட்டித் திருட முயன்றது தெரியவந்தது.

அவா்களை நண்பா்கள், பொதுமக்கள் உதவியுடன் பிடித்த ராஜவேல், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தாா். ஆனால், மா்ம நபா்கள் 5 பேரும் அங்கிருந்தவா்களை தள்ளிவிட்டு தப்பிச் சென்றனா். தகவலின்பேரில் திட்டக்குடி போலீஸாா் அங்குவந்து மா்ம நபா்கள் வீட்டுச் சென்ற 3 கைப்பேசிகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT