கடலூர்

அண்ணாமலை பல்கலை. மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்

28th Nov 2022 01:43 PM

ADVERTISEMENT

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள், துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலூர் மாவட்டம், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள், நர்சுகள் தங்களுக்கு மாதச் சம்பளம் வழங்காததைக் கண்டித்தும் உடன் வழங்க கோரியும் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் தங்கள் கையில் கோரிக்கை அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT