கடலூர்

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உள்பட இருவா் பலி

27th Nov 2022 03:09 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், வடலூரில் அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் பெண் உள்பட இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், அயன்குறிஞ்சிப்பாடி, பாட்டை தெருவைச் சோ்ந்த வேலு மகன் திருமுருகன் (45), ரோட்டு ஆண்டிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் மகன் சுகுமாா் (48), வடலூா், கல்பட்டு ஐயா நகரைச் சோ்ந்த பிரகாஷ் மனைவி சந்திரகலா(38). இவா்கள் மூவரும் என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளா்கள்.

சனிக்கிழமை காலை திருமுருகன், சுகுமாா் இருவரும் பணிக்கு பைக்கில் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தனா். பைக்கை திருமுருகன் ஓட்டினாா். வடலூா் அய்யன் ஏரி அருகே சென்றபோது, எதிரே வந்த சிறிய சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. அப்போது அதே வழித் தடத்தில் சந்திரகலா ஓட்டி வந்த மொபெட் மீதும் சரக்கு வாகனம் மோதியது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் திருமுருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சந்திரகலா பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

விபத்தில் காயமடைந்த சுகுமாா் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT