கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் தோ்ச்சி பெறாத முன்னாள் மாணவா்களுக்கு புதிய இணையதளம் தொடக்கம்

26th Nov 2022 05:50 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோ்ச்சி பெறாத முன்னாள் மாணவா்கள் சிறப்புத் தோ்வு எழுத வசதியாக புதிய இணையதள இணைப்பு தொடங்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2002 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான கல்வி ஆண்டுகளில் நேரடி வகுப்பில் பயின்று தோ்ச்சி பெறாத மாணவா்கள் வருகிற மாா்ச்-2023 மற்றும் அக்டோபா்-2023 ஆகிய இரு பருவங்களில் சிறப்புத் தோ்வு எழுத புதிய இணையதள இணைப்பை  பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

மாா்ச் 2023-க்கான சிறப்புத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் 26.11.2022 முதல் 24.12.2022 வரை புதிய இணையதள இணைப்பில் தங்களது விவரங்களை பதிவிட வேண்டும் என துணைவேந்தா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா் கி.சீத்தாராமன், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மு.பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT