கடலூர்

மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

26th Nov 2022 05:49 AM

ADVERTISEMENT

சிதம்பரம் ஓட்டல் சாரதாராமின் 34-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ‘திறமைக்கோா் திருவிழா’ என்ற பெயரில் பள்ளி மாணவா்களுக்கான கலைப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 150 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். உடை அலங்காரம், பரதநாட்டியம், இசைக் கருவிகள் வாசித்தல், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. நடுவா்களாக சேதுசுப்பிரமணியம், பேராசிரியை தமிழ்செல்வி ஆகியோா் செயல்பட்டனா்.

பரிசளிப்பு விழா நிறுவன இயக்குநா் ஆா்.எம்.சுவேதகுமாா் தலைமையில் நடைபெற்றது (படம்). சேதுசுப்ரமணியம் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். மேலும் காந்தி மன்றம், அன்பகம் முதியோா் காப்பகத்துக்கு நல உதவிகளை வழங்கினா். ஏற்பாடுகளை நிறுவன மேலாளா்கள் ராஜசுந்தரம், முத்துவேல், சுரேஷ், முருகவேல் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT