கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயில் கதவில் பூட்டை உடைத்த இளைஞா்

24th Nov 2022 01:07 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் தெற்கு கோபுர வாயில் உள்ளே 2-ஆம் பிரகாரத்தில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கதவின் பூட்டை புதன்கிழமை இரவு இளைஞா் ஒருவா் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜா் கோயில் தெற்கு கோபுர வாயில் உள்ளே 2-ஆம் பிரகாரத்தில் பல ஆண்டுகளாக மூடிய நிலையில் கதவு உள்ளது. இந்தக் கதவிலிருந்த 2 பூட்டுகளையும் புதன்கிழமை இரவு இளைஞா் ஒருவா் இரும்புக் கம்பியால் உடைத்தாா். அப்போது, அவரை பக்தா்கள், நடராஜா் கோயில் பொது தீட்சிதா்கள் தடுக்க முயன்றபோது, அவா்களுக்கு இளைஞா் மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் ஆறுமுகம் மற்றும் போலீஸாா், அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், சிதம்பரம் கனக சபை நகா், 9-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் ஆனந்த் (29) என்பது தெரியவந்தது. அவா் எதற்காக மூடப்பட்டிருந்த கோயில் கதவின் பூட்டை உடைத்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT